No results found

    நூல் வெளியீட்டு விழா-பொதுக்கூட்டம்


    சிவகங்கை அரண்மனை வாசலில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் அறிவித்த ஜம்புத்தீவு பிரகடனத்தை இந்திய சுதந்திரப் போராட்ட மாக மத்திய, மாநில அரசுகள் அறிவுப்புச்செய்ய வலியுறுத்தி சிவகங்கையின் அனைத்துசமூக மக்கள், அனைத்து சமூக அமைப்பு களின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் திருச்சியில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்தனர். இதனை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று முதல் சுதந்திர போராட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர் மேலும் ஜம்பு தீவு பிரகடனம் சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழா வும் நடைபெற்றது இவ்விழாவில் இளைய மன்னர் மகேஷ் துரை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சி யப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குண சேகரன், நாகராஜன், மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள், இஸ்லாமிய தலை வர்கள், மூத்த கல்வியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال